\
மீண்டும் காமெடி பிஸ்தா!

மீண்டும் காமெடி பிஸ்தா!

மீண்டும் காமெடி பிஸ்தா!
Published on

'மெட்ரோ' சிரீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு 'பிஸ்தா' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதை இயக்குனர் வெங்கட்பிரபு இன்று காலை வெளியிட்டார்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், கார்த்திக், நக்மா, மணவண்ணன்,மவுலி உட்பட பலர் நடித்த படம், ’பிஸ்தா’. எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருந்த இந்தப் படம், 1997-ம் ஆண்டு வெளியானது. இதே தலைப்பை இப்போது சிரீஷ் நடிக்கும் படத்துக்கு வைத்துள்ளனர். இதை ரமேஷ் பாரதி இயக்குகிறார். மிருதுளா முரளி, ’சைத்தான்’ அருந்ததி நாயர் ஹீரோயினாக நடிக்கின்றனர். யோகிபாபு, சதீஷ், சென்ராயன் உட்பட ஏராளமான காமெடியன்கள் நடிக்க உள்ளனர். ஆகஷ்ட் 2-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. 

படம் பற்றி சிரீஷ் கூறும்போது, ’மெட்ரோ படத்தின் எடிட்டரான ரமேஷ் பாரதி இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் ஆகிறார். இது கிராமத்துக் கதையை கொண்ட காமெடி படம். லோக்கல் சந்தையில் வேலை பார்ப்பவனாக நான் நடிக்கிறேன். நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட கதை’ என்றார். படத்தின் டைட்டிலை, தயாரிப்பாளர் பிரமிட் நடராஜனிடம் இருந்து அனுமதிபெற்று பயன்படுத்துவதாகப் படக்குழுக் கூறியுள்ளது. 
’மெட்ரோ’ படத்துக்கு பிறகு இப்போது தரணிதரன் இயக்கும் ’ராஜா ரங்குஸ்கி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் சிரீஷ்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com