ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகும் 'விட்னஸ்' திரைப்படம்

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகும் 'விட்னஸ்' திரைப்படம்
ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகும் 'விட்னஸ்' திரைப்படம்

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியுள்ள 'விட்னஸ்' திரைப்படம் நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை பேசுகிற படமாக 'விட்னஸ்' திரைப்படம் வெளிவரவுள்ளது. தெலுங்கு, கன்னடத் திரைத்துறைகளில் மாபெரும் வெற்றிப் படங்களைத் தயாரித்து வெளியிட்ட 'தி பீப்பிள் மீடியா ஃபேக்டரி', உணர்வுப்பூர்வமான இத்திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறது.

'விட்னஸ்' திரைப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோகிணி, அழகம் பெருமாள், சண்முகராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் நேரடியாக வெளியாகவிருக்கும் இத்திரைப்படம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் டப்பிங் செய்யப்படவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com