நடன நிகழ்ச்சியில் தடுமாறி விழுந்த நடிகை படுகாயம்!

நடன நிகழ்ச்சியில் தடுமாறி விழுந்த நடிகை படுகாயம்!
நடன நிகழ்ச்சியில் தடுமாறி விழுந்த நடிகை படுகாயம்!

நடன நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக, தவறி விழுந்ததில், நடிகை ஸ்ரத்தா ஆர்யா காயமடைந்தார்.

தமிழில், கள்வனின் காதலி, வந்தே மாதரம் உட்பட சில படங்களில் நடித்தவர் இந்தி நடிகை ஸ்ரத்தா ஆர்யா. தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ’நாச் பலியே’ என்ற டிவி. ரியாலிட்டி ஷோவின் 9 வது தொடரில் பங்கேற்று வருகிறார். இதற்கான படப்பிடிப்பில், தனது ஆண் நண்பர் ஆலம் மக்காருடன் கடந்த சில நாட்களுக்கு முன் கலந்து கொண்டார்.

நடனமாடிக் கொண்டிருந்தபோது, ஆலம் அவரைத் தலைகீழாக தூக்கி வைத்திருக்க வேண்டும். அப்போது எதிர்பாராதவித மாக ஆலமின் கை நழுவியதில், கீழே விழுந்தார் ஸ்ரத்தா. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  சிறிது நேரத் தில் அவர் மயங்கிவிட்டார். உடனடியாக அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘’ பலத்த காயம் ஏதுமில்லை என்றாலும் பெரிய விபத்தில் இருந்து தப்பியிருக்கிறேன். ஆலம், கை வழுவியதால் கீழே விழுந்துவிட்டேன். பயிற்சியின் போது சரியாக ஆடினோம். நடுவர்கள் முன்னால் தடுமாறிவிட் டோம். இருந்தாலும் சிறப்பாக ஆடியிருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com