முருகன் கோவிலுக்கு வந்திருக்கக்கூடாதா..? அஜித்துக்கு மன்சூர் அலிகான் அறிவுரை

முருகன் கோவிலுக்கு வந்திருக்கக்கூடாதா..? அஜித்துக்கு மன்சூர் அலிகான் அறிவுரை
முருகன் கோவிலுக்கு வந்திருக்கக்கூடாதா..? அஜித்துக்கு மன்சூர் அலிகான் அறிவுரை

விவேகம் படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தபோதிலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்தப்படத்திற்கு  ப்ளூசட்டை விமர்சனம் செய்தது தரக்குறைவாக இருப்பதாகக்கூறி திரையுலகைச் சேர்ந்தவர்களும், அஜித் ரசிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில் மற்றொரு தரப்பினர் ப்ளூசட்டைக்கு ஆதராவக பேசி வருகின்றனர். இந்நிலையில், எதையும் வெளிப்படையாக பேசி வரும் நடிகர் மன்சூர் அலிகான் அஜித்துக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். 


அந்தக் கடிதத்தில்,’’தம்பி அஜித்துக்கு மன்சூர் அலிகானின் அன்பு வணக்கங்கள். தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படத்தையும் அயல் தொழில்கலைஞர்களை வைத்து எடுத்து விட்டீர்கள். தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழ்நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும். படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்புடுகிறீர். தமிழ்நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோவில்களுக்கு வந்திருக்கக்கூடாதா..? உரிமையுடன், நடிப்புத் தொழிலாளி மன்சூர் அலிகான்’’எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com