ஜூலையில் தொடங்கும் லிங்குசாமியின் தெலுங்கு பட ஷூட்டிங்

ஜூலையில் தொடங்கும் லிங்குசாமியின் தெலுங்கு பட ஷூட்டிங்

ஜூலையில் தொடங்கும் லிங்குசாமியின் தெலுங்கு பட ஷூட்டிங்
Published on

இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கும் “ராம்பொத்தேனி 19’ படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜூலையில் இருந்து துவங்கவுள்ளது.

’சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் இயக்காமல் இருந்த இயக்குநர் லிங்குசாமி, தற்போது தமிழ், தெலுங்கில் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்கவிருக்கிறார். தெலுங்கின் முன்னணி நடிகரான ராம்பொத்தேனி ஹீரோவாகவும், வசூல் சாதனை படைத்த ‘உப்பெனா’ பட  கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு இப்பட பூஜையின் படங்களும் அறிவிப்பும் வெளியானது. ஆனால், மற்ற அப்டேட்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படத்தின் ஹீரோ ராம் பொத்தேனி தனது ட்விட்டர் பக்கத்தில், “கடைசிக்கட்டக் கதை முடிந்தது. லவ் யூ லிங்குசாமி சார். நான் சொல்றேன். கேமராவை ரோல் பண்ணுங்க” என்று பதிவிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜூலையில் துவங்கவுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com