\
நடிகரும், மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் மரணம்..!

நடிகரும், மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் மரணம்..!

நடிகரும், மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் மரணம்..!
Published on: 

நடிகரும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார். 

“கண்ணா லட்டு தின்ன ஆசையா” படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மருத்துவர் சேதுராமன். அதன் பின்னர் “வாலிப ராஜா”, “50 50” “சக்க போடு போடு ராஜா” உள்ளிட்ட படங்களில் நடித்தார். இது மட்டுமல்லாமல் சென்னையில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையில் தோல் மருத்துவ நிபுணராகவும் பணிபுரிந்து வந்தார் சேதுராமன்.

இந்நிலையில் இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் தனது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவருக்கு மனைவியும் ஒரு குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com