\
உதயநிதி நடிக்கும் 'ஆர்டிகிள் 15' ரீமேக் படத்தில் தெலுங்கு நடிகர் ராஜசேகர் மகள் ஷிவானி!

உதயநிதி நடிக்கும் 'ஆர்டிகிள் 15' ரீமேக் படத்தில் தெலுங்கு நடிகர் ராஜசேகர் மகள் ஷிவானி!

உதயநிதி நடிக்கும் 'ஆர்டிகிள் 15' ரீமேக் படத்தில் தெலுங்கு நடிகர் ராஜசேகர் மகள் ஷிவானி!
Published on

உதயநிதி நடிக்கும் 'ஆர்டிகல் 15' ரீமேக் படத்தில் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் மகள் ஷிவானி ராஜசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த 'ஆர்டிகல் 15' படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் அந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். அதேபோல் பிக்பாஸ் ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com