\
'அவர் மாஸ்டர், நாம் சீடர்கள்': சிவாஜி பற்றி அமிதாப்பின் தமிழ் ட்விட்!

'அவர் மாஸ்டர், நாம் சீடர்கள்': சிவாஜி பற்றி அமிதாப்பின் தமிழ் ட்விட்!

'அவர் மாஸ்டர், நாம் சீடர்கள்': சிவாஜி பற்றி அமிதாப்பின் தமிழ் ட்விட்!
Published on

'அவர் மாஸ்டர்; நாம் அவரது சீடர்கள்' என்று நடிகர் சிவாஜி கணேசன் பற்றி இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் தமிழில் ட்விட் செய்துள்ளார்.

அமிதாப் பச்சன், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படம், 'உயர்ந்த மனிதன்'. தமிழ், இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை தமிழ்வாணன் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. அமிதாப் பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார், அமிதாப் பச்சன். அதில், ஒரு வீட்டில் நடிகர் சிவாஜி கணேசனின் புகைப்படம் மாட்டியிருப்பது போலவும், அதற்கு அருகே அமிதாப் பச்சன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பது போலவும் காட்சிகள் உள்ளன. 

அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அமிதாப் பச்சன், ’மாஸ்டர் சிவாஜி கணேசனின் நிழலில் இரு சீடர்கள், எஸ்.ஜே. சூர்யாவும் நானும்! சிவாஜி, தமிழ் சினிமாவின் உச்சபட்ச அடையாளம். அவரது படம் இந்தச் சுவரை அலங்கரிக்கிறது. அவருக்கு என் மரியாதை. அவர் பாதங்களை வணங்குகிறேன். அவர் மாஸ்டர்... நாம் அவருடைய சீடர்கள்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com