\
மிர்ச்சி சிவாவின் ‘காசேதான் கடவுளடா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

மிர்ச்சி சிவாவின் ‘காசேதான் கடவுளடா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

மிர்ச்சி சிவாவின் ‘காசேதான் கடவுளடா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Published on

மிர்ச்சி சிவாவின் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சித்ராலயா கோபு எழுத்து இயக்கத்தில், முத்துராமன், லட்சுமி, தேங்காய் சீனிவாசன், எம்.ஆர்.ஆர். வாசு, ஸ்ரீகாந்த், மனோரமா ஆகியோர் நடிப்பில் கடந்த 1972-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நகைச்சுவை திரைப்படம் ‘காசேதான் கடவுளடா’. இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் ரீமேக் செய்துள்ளார். முத்துராமன் கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார்.

மேலும் கருணாகரன், ஊர்வசி, யோகி பாபு, தலைவாசல் விஜய், விடிவி கணேஷ், ‘குக் வித் கோமாளி’ புகழ், சிவாங்கி ஆகியோர் நடித்துள்ளனர். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டநிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற அக்டோபர் மாதம் 7-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு என். கண்ணன் இசையமைத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com