ஸ்ரேயா கோஷலுக்கு ரசிகர்கள் வாழ்த்து

ஸ்ரேயா கோஷலுக்கு ரசிகர்கள் வாழ்த்து

ஸ்ரேயா கோஷலுக்கு ரசிகர்கள் வாழ்த்து
Published on

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

தனது இனிமை குரலால் இந்தியா முழுவதும் உள்ள ஏராளமான ரசிகர்களை ஈர்த்தவர் ஸ்ரேயா கோஷல். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார். தமிழில், சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற, ’முன்பே வா, அன்பே வா’, 7ஜி ரெயின்போ காலனி படத்தில், ‘நினைத்து நினைத்துப் பார்த்தேன்’, மைனா படத்தில் நீயும் நானும் வானும் மண்ணும்’உட்பட ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்குத் திரைப்பிரபலங்களும், அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com