ஆத்தாடி, 3 அவிச்ச முட்டைகளுக்கு 1672 ரூபாயா? இசை அமைப்பாளர் அப்செட்!

ஆத்தாடி, 3 அவிச்ச முட்டைகளுக்கு 1672 ரூபாயா? இசை அமைப்பாளர் அப்செட்!

ஆத்தாடி, 3 அவிச்ச முட்டைகளுக்கு 1672 ரூபாயா? இசை அமைப்பாளர் அப்செட்!
Published on

வெறும் மூன்று முட்டைகளுக்கு நட்சத்திர ஓட்டலில் 1,672 ரூபாய் வசூலித்ததாக இசை அமைப்பாளர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் ராகுல் போஸ், கடந்த சில மாதங்களுக்கு முன் நட்சத்திர ஓட்டல் ஒன்று இரண்டு வாழைப் பழங்களுக்கு ரூ.422 வசூலித்ததாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையானது. சமூக வலைத்தளங்களில் இந்த விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்னர் அந்த ஓட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் பிரபல இந்தி இசை அமைப்பாளர்கள் விஷால்-ஷேகருடன் இணைந்து பணியாற்றுபவரும் பாடகருமான ஷேகர் ராவ்ஜியானி, தனது சமூக வலைத்தள கணக்கில், பில் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலான ஹயாத் ரீஜென்ஸியில் அவர் மூன்று அவித்த முட்டைகளை ஆர்டர் செய்திருந்தார். அதற்கான பில், ஜி.எஸ்.டி வரி, சேவை வரி உட்பட பல வரிகளுடன் சேர்த்து 1672 ரூபாய். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், ’’மூணு முட்டைகளுக்கு இவ்வளவு தொகையா?’’ என்று ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

இவரது பதிவு இணையத்தில் வைரலானது. ஏராளமானோர் கிண்டலாகவும் சீரியசாகவும் இதற்கு கமென்ட் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர், ’ஓட்டலுக்கு வெளியே உள்ள கடையில் ஒரு டஜன் முட்டை வாங்கி, அறையில் எலெக்ட்ரிக் அடுப்பில் அவித்து சாப்பிட்டிருந்தாலும் இதற்கு குறைவாகத்தான் வந்திருக்கும்’ என்று ஆலோசனை கூறியுள்ளார்.

’ஸ்டார் ஓட்டல்ல இதெல்லாம் சஜகம், இதை புகார் சொல்லக் கூடாது’ என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com