\
200 கோடி மெகா பட்ஜெட்டில் உருவாகும் ஷாருக்கான் - அட்லீ படம்

200 கோடி மெகா பட்ஜெட்டில் உருவாகும் ஷாருக்கான் - அட்லீ படம்

200 கோடி மெகா பட்ஜெட்டில் உருவாகும் ஷாருக்கான் - அட்லீ படம்
Published on

200 கோடி பட்ஜெட்டில் ஷாருக்கான் - அட்லீ இணையும் படம் உருவாகவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கும் அட்லீ கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘பதான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடியவுள்ள நிலையில், இம்மாத இறுதியில் அட்லீ படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் தொடங்கவுள்ளன. இந்த நிலையில், படத்தின் பட்ஜெட் 200 கோடி என்றும் தற்போது முன் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com