\
மதுரவீரன் ஆனார் கேப்டன் மகன்

மதுரவீரன் ஆனார் கேப்டன் மகன்

மதுரவீரன் ஆனார் கேப்டன் மகன்
Published on

மதுரவீரன் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

‘சகாப்தம்’ படம் மூலம் ஹீரோவானவர் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன். இந்தப் படத்தை அடுத்து, அவர் நடிக்கும் படத்தை பி.ஜி.முத்தையா இயக்குகிறார்.

இவர், பூ, கண்டேன் காதலை, சகுனி, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, சண்டிவீரன் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சண்முகப் பாண்டியனின் ஜோடியாக புதிய ஹீரோயின் நடிப்பார் என்று தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com