\
அதிரடி போலீஸ்காரராக நடிக்கிறார் விஜயகாந்த் மகன்!

அதிரடி போலீஸ்காரராக நடிக்கிறார் விஜயகாந்த் மகன்!

அதிரடி போலீஸ்காரராக நடிக்கிறார் விஜயகாந்த் மகன்!
Published on

தனது அடுத்த படத்தில் அதிரடி போலீஸ்காரராக நடிக்கிறார், விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன்.

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன், 'சகாப்தம்' என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்து 'மதுரவீரன்' என்ற படத்தில் நடித் தார். இதற்கிடையே, 'தமிழன் என்று சொல்' என்ற படத்தில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் விஜயகாந்தும் நடிப்பதாக இருந்தது. ஆனால், விஜயகாந்தின் உடல்நிலை காரணமாக இந்தp படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சண்முகப் பாண்டி யன் நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ’சிறுத்தை’ சிவாவிடம் இணை இயக்குனராகp பணியாற்றிய பூபாலன் இயக்குகிறார். ஜி என்டர்டெயி னர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சண்முகப்பாண்டியன் ஜோடியாக ரோனிகா சிங்கும் அம்மாவாக தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனாவும் நடிக்கின்றனர். மற்றும் வம்சி கிருஷ்ணா, அழகம் பெருமாள், முனிஷ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். 

(ரோனிகா சிங்)

‘’விஜயகாந்த் பல போலீஸ் கதைகளில் நடித்திருக்கிறார். இதுவும் அதுபோன்ற கதைதான். ஆனால் சூப்பர் ஹீரோ மாதிரியான கதை இல்லை. இந்த கதைக்கு சண்முகப்பாண்டியன்தான் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரிடம் கதை சொன்னேன். பிடித்திருந்தது. இது காஞ்சிபுரத்தில் நடக்கும் கதை. காதல், மோதல், ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து கமர்சியல் விஷயங்களும் படத்தில் இருக்கும். இந்தப் படத்தை பார்த்தால், ஒவ்வொருவரும் போலீஸ் ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். போலீஸூக்கு மரியாதை செய்யும் படமாகவும் இது இருக்கும்’’ என்றார் இயக்குனர் பூபாலன்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com