ஷங்கர் இயக்கத்தில் விஜய் ? - வாட்ஸ் அப்பில் லீக் ஆன ‘தளபதி 65’

ஷங்கர் இயக்கத்தில் விஜய் ? - வாட்ஸ் அப்பில் லீக் ஆன ‘தளபதி 65’

ஷங்கர் இயக்கத்தில் விஜய் ? - வாட்ஸ் அப்பில் லீக் ஆன ‘தளபதி 65’
Published on

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் தலைப்பு ‘மாஸ்டர்’ என புத்தாண்டு அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தின் தலைப்பு அறிவிப்பதற்கான செய்தியுடன் விஜய் புகைப்படம் ஒன்றும் வெளியானது. அந்தப் பயம் ஒரு மயங்கிய நிலையை பிரதானப் படுத்தும் விதத்தில் கலங்கலாக இருந்தது. அதில் விஜயின் முகத்தை தவிர வேறெதுவும் தெளிவில்லை. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை. கர்நாடக மாநிலம் ஹிமோகாவில் அதற்கான செட்டுகள் அமைக்கப்பட்டு மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் விஜயின் 65வது படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. தற்போது ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங் வேலைகளில் இருக்கிறார். இதனிடையே சன் பிக்சர் நிறுவனமும் ஷங்கரும் இணைந்து எடுக்க உள்ள படத்தில் விஜய் நாயகனாக நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ஏற்கெனவே விஜய் ‘நண்பன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் ‘த்ரி இடியட்ஸ்’ படத்தின் ரீமேக் ஆக தமிழில் உருவானது. அதன் பிறகு மீண்டும் விஜயின் 65வது படத்தில் ஷங்கருடன் கை கோர்ப்பார் எனத் தெரிகிறது. அதற்கான ஆதாரமாக விஜயின் மேனேஜர் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட செய்தி ஒன்று லீக் ஆகியுள்ளது. அதனை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.

விஜயின் 65வது படத்தை இயக்கும் பட்டியலில் வெற்றிமாறன், அட்லீ, பேரரசு, மகிழ் திருமேனி ஆகிய இயக்குநர்களின் பெயர் அடிபட்டுக் கொண்டிந்த நிலையில், திடீரென்று ஷங்கரின் பெயர் சார்ந்த ஒரு உரையாடல் வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com