”ஷங்கர் வேறு படம் இயக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தப் போவதில்லை” - லைகா

”ஷங்கர் வேறு படம் இயக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தப் போவதில்லை” - லைகா

”ஷங்கர் வேறு படம் இயக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தப் போவதில்லை” - லைகா
Published on

’இந்தியன் 2’ படப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் மத்தியஸ்தத்தில் பங்கேற்க இருப்பதாக லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க கடந்த 2019-ல் தொடங்கப்பட்ட திரைப்படம் ’இந்தியன் 2’. பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 60 விழுக்காடு நிறைவடைந்த நிலையில், இயக்குநருக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாட்டால் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் இந்தப் பிரச்னை நீதிமன்றத்துக்கு செல்ல, ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதி தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியின் மத்தியஸ்த நடைமுறையின்போது, ஷங்கர் வேறு படம் இயக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்த போவதில்லை என்று லைகா தெரிவித்துள்ளது. அதேபோல, ஷங்கர் தரப்பில் ஏற்கனவே ஒத்துக்கொண்ட படங்களை முடிக்க அனுமதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com