\
திருமணம் செய்ய மறுக்கிறார் ‘பிக்பாஸ்’ தர்ஷன் - நடிகை ஷனம் ஷெட்டி புகார்

திருமணம் செய்ய மறுக்கிறார் ‘பிக்பாஸ்’ தர்ஷன் - நடிகை ஷனம் ஷெட்டி புகார்

திருமணம் செய்ய மறுக்கிறார் ‘பிக்பாஸ்’ தர்ஷன் - நடிகை ஷனம் ஷெட்டி புகார்
Published on

நிச்சயதார்த்தம் செய்துவிட்டு திருமணத்திற்கு மறுத்து விட்டதாக "பிக்பாஸ்" தர்ஷன் மீது நடிகை ஷனம் ஷெட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை ஷனம் ஷெட்டி தனது வழக்கறிஞர்களுடன் சேர்ந்து இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஷனம் ஷெட்டி, “பிக்பாஸ் தர்ஷனும் நானும் காதலித்தோம். கடந்த ஆண்டு மே மாதம் எங்களுக்கு குடும்பத்தினரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஜூன் மாதம் திருமணத் தேதி முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது தர்ஷன் என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார். பிக்பாஸிற்கு தர்ஷனை அனுப்பியதே நான் தான். அவருக்கு விண்ணப்பம் அனுப்பியதும் நான்தான். அவர் புகழ் பெற்றதில் எனக்கும் பங்கு உண்டு. அவர் தேவைக்காக லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளேன்.

சினிமா நடிகர்களையும் தன்னையும் இணைத்து தவறாகக் கூறி திருமணத்தை நிறுத்தி உள்ளார். இதனால் என்னுடைய குடும்பமே மன உளைச்சலில் உள்ளது. தர்ஷன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com