\
சாதி வெறியர்களே உங்களுக்கு வெட்கமில்லையா ? கார்த்திக் சுப்புராஜ்

சாதி வெறியர்களே உங்களுக்கு வெட்கமில்லையா ? கார்த்திக் சுப்புராஜ்

சாதி வெறியர்களே உங்களுக்கு வெட்கமில்லையா ? கார்த்திக் சுப்புராஜ்
Published on

தமிழ் திரையுலகின் இளம் இயக்குநர்களில் அதிக கவனம் பெற்றவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் பீட்சா திரைப்படம் மூலம் அறிமுகமாகி ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரின் அடுத்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார்.

கார்த்திக் சுப்புராத் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ளார், அதில் சாதி ரீதியான படுகொலைகளை கடுமையாக சாடியுள்ளார். அந்தப் பதிவில் " சிவகங்கை மற்றும் கேரளாவில் நிகழ்ந்த  கொலைகள் ஒன்றை மிகவும் அழுத்தம் திருத்தமாக சாதி எப்படி நமது நாட்டில் வலுவாக உள்ளது என்பதை உணர்த்துகிறது. இந்தச் சாதிய வெறி பல கொடூரமான, மிருகத்தனமான கொலைகளுக்கு காரணமாகிறது. சாதி வெறியர்களே நீங்கள் இதற்கு வெட்கப்பட வேண்டும்" என பதிவிட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com