\
’ஆகஸ்ட் 15’ ல் வெளியாகும் ஷாருக்கான் - அட்லீ பட அதிகாரபூர்வ அறிவிப்பு?

’ஆகஸ்ட் 15’ ல் வெளியாகும் ஷாருக்கான் - அட்லீ பட அதிகாரபூர்வ அறிவிப்பு?

’ஆகஸ்ட் 15’ ல் வெளியாகும் ஷாருக்கான் - அட்லீ பட அதிகாரபூர்வ அறிவிப்பு?
Published on

ஷாருக்கான் - அட்லீ இணையும் புதிய படத்தின் அறிவிப்பு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கும் அட்லீ கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘பதான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இப்படத்தின், படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஷாருக்கான் அட்லீ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாவதோடு ஷாருக்கான் தோன்றும் சிறப்பு ப்ரோமோ டீசரையும் வெளியிட திட்டமிட்டிருக்கிறது படக்குழு என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com