’விக்ரம் வேதா’ ரீமேக்கில் இருந்து விலகினார் ஷாரூக் கான்!
விக்ரம் வேதா படத்தில் இந்தி ரீமேக்கில் ஷாரூக் கான் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மாதவன், விஜய் சேதுபதி நடித்து கடந்த வருடம் வெளியான படம், ’விக்ரம் வேதா’. புஷ்கர்-காயத்ரி இயக்கி இருந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்தப் படத்தை படத்தைப் பார்த்த ஷாரூக், இதன் இந்தி ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார் முதலில். அவருக்கு விஜய் சேதுபதி நடித்திருந்த வில்லன் கேரக்டர் பிடித்திருந்தது. அதில் நடிக்க முடிவு செய்திருந்தார்.
ஆனால் படத் தயாரிப்பு நிறுவனம் அவரை மாதவன் கேரக்டரில் நடிக்குமாறு கேட்டதாம். அதோடு இந்தப் படத்தை ஷாரூக் கான் இயக்கி நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் கதையில் சில மாற்றங்கள் செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. இதில் கருத்து வேறுபாடு ஏற்பட் டதால் இந்தப் படத்தின் ரீமேக்கில் இருந்து ஷாரூக் கான் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.