சினிமா
“அஜித், விஜய் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்”- ஷாரூக்கான் பதில் என்ன ?
“அஜித், விஜய் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்”- ஷாரூக்கான் பதில் என்ன ?
ட்விட்டரில் #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பதில் அளித்தார். தமிழகத்தைச் சேர்ந்த அவரது ரசிகர்களும் அவரிடம் கேள்விகளை எழுப்பினர். தமிழில் திரைப்படம் இயக்கும் எண்ணம் இருக்கிறதா? என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு, ‘நிச்சயமாக!! தமிழ் மொழியில் எனக்கு நல்ல பரிட்சயம் உள்ளது’ என்று அசத்தலாக பதிலளித்தார்.
அதேபோல், அஜித், விஜய் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என அவர்களது ரசிகர்கள் கேட்டிறிந்தனர். அஜித் ரசிகர் எழுப்பிய கேள்வி, ‘என்னுடைய நண்பர்’ என கூலாக பதிலளித்தார்.
அதேபோல், விஜய் பற்றி கூறுகையில், ‘அற்புதம்’ என்றார். அதேபோல், ஷாரூக்கானுடன் அஜித், விஜய் இருக்கும் படங்களை ரசிகர்கள் பதிவிட்டனர்.