படம் படுதோல்வி: பணத்தைத் திருப்பிக் கொடுத்தார் ஷாரூக்கான்!

படம் படுதோல்வி: பணத்தைத் திருப்பிக் கொடுத்தார் ஷாரூக்கான்!

படம் படுதோல்வி: பணத்தைத் திருப்பிக் கொடுத்தார் ஷாரூக்கான்!
Published on

தனது படம் தோல்வி அடைந்ததை அடுத்து விநியோகஸ்தர்களுக்கு நடிகர் ஷாரூக் கான் பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.

ஷாரூக் கான், அனுஷ்கா சர்மா நடித்து வெளியான இந்திப் படம், ‘ஜப் ஹாரி மெட் சேஜல்’.  கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இந்தப் படத்தை ஷாரூக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப்படத்தின் விநியோக உரிமையை, 80 கோடி ரூபாய்க்கு என்.ஹெச் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் வாங்கியிருந்தது. இந்த படம் படுதோல்வி அடைந்ததால் விநியோகஸ்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

நூறு கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், ரூ.64 கோடி மட்டுமே வசூலித்தது. ஆனால், சேட்டிலைட், இசை, டிஜிட்டல் ரைட்ஸ் ஆகியவற்றின் மூலம் ஷாரூக் கான் லாபம் அடைந்திருந்தார். இதையடுத்து நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு ஷாரூக் கான் பணத்தைத் திருப்பிக்கொடுத்துள்ளார். 

அவர் ஏற்கனவே அசோகா, பஹேலி, தில்வாலே ஆகிய படங்களின் தோல்விக்காக பணத்தை அவர் திருப்பிக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சல்மான் கானும் ’டியூப்லைட்’ படம் தோல்வி அடைந்ததை அடுத்து விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்தார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com