ரூ.1000 கோடியை கடந்தது ஜவான்; வசூலில் புதிய சாதனை படைத்த ஷாருக்கான்.. கொண்டாடத்தில் ரசிகர்கள்!

ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் உலகளவில் ரூ.1000 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.
jawan
jawanTwitter

பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுக்கு இந்த வருடம் மிகவும் சாதகமான ஒன்றாக மாறியிருக்கிறது. குடியரசுத் தினத்தையொட்டி இந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வெளியான பதான் திரைப்படமும், அட்லி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான ஜவான் திரைப்படமும் பாலிவுட் உலகையே மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வைத்துள்ளது.

Jawan
Atlee
ShahRukhKhan
Jawan Atlee ShahRukhKhan

ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு படங்களும் ஒரே ஆண்டில் உள்நாட்டிலேயே 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. என்றாலும் கூட ஜவான் தொடர்ச்சியாக வசூல் வேட்டையாடி வருகிறது. 17ஆவது நாளில் ஜவான் திரைப்படம் உள்நாட்டில் சுமார் ரூ546 கோடி வசூல் செய்ததாகவும் இது பதான் படத்தின் மொத்த வசூலான ரூ.543 கோடியை காட்டிலும் 3 கோடி ரூபாய் அதிகம் எனவும் கூறப்பட்டது.

18ஆவது நாளில் உள்நாட்டில் அதிவேகமாக ரூ.500 கோடி வசூலை எட்டியை திரைப்படம் என்ற சாதனையை ஜவான் படைத்தது. இந்த வருடம் வெளியான பதான் மற்றும் கடார் 2 ஆகிய படங்கள்தான் இந்த சாதனையை நிகழ்த்தியது. சனிக்கிழமை 12-13 கோடிகள் வரை வசூல் செய்தது.

நேற்று முன் தினம் வரை ஜவான் திரைப்படம் சுமார் 960 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கணிசமான அளவிற்கு வசூல் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஜவான் 1000 கோடி வசூலை எட்டியுள்ளது. இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் உலகளவில் ஜவான் திரைப்படம் ரூ.1004.92 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷாருக்கானின் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகிறார்கள். பதான் படத்தை தொடர்ந்து ஷாருக்கானின் இரண்டாவது படம் 1000 கோடி ரூபாய் வசூல் பட்டியலில் பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com