\
நடிக்க வருகிறாரா பாலிவுட் பாட்ஷா மகள்...?

நடிக்க வருகிறாரா பாலிவுட் பாட்ஷா மகள்...?

நடிக்க வருகிறாரா பாலிவுட் பாட்ஷா மகள்...?
Published on

 பாலிவுட்டின் பாட்ஷா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கபடுபவர் ஷாருக்கான். இவருடைய படங்கள் வெளியாகும் சமயம் இந்தி பட ரசிகர்களுக்கு தீபாவளி தான். பெரும் ரசிகர் பட்டாளத்தை தன்வசப்படுத்திள்ள ஷாருக்கானின் குடும்பத்தில் இருந்து இன்னொருவரும் நடிக்க வருவது அவருடைய ரசிகர்களை குஷிபடுத்தி உள்ளது. அண்மை காலமாகவே ஷாருக்கானின் மகள் சுகானாவை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சித்து வந்த நிலையில் இப்போது அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யபட்டுள்ளதாகவும்  அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 தற்போது 17 வயதான சுகானா கல்லூரில் படிப்பதுடன், மாடலிங், நடிப்பு, நடனம் என கற்று வருகிறார். மகளுக்கு நடிக்கும் ஆசை இருப்பதாகவும்,அதற்க்கான திறமையை அவர் வளர்த்து வருவதாகவும் ஷாருக்கான் அண்மையில் கூறியிருந்த நிலையில் இச்செய்தி பாலிவுட்டில் பரபரப்பாக பேசபட்டு வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com