\
ஷாருக்கான் படத்துக்குத் தடை விதித்த பாகிஸ்தான்

ஷாருக்கான் படத்துக்குத் தடை விதித்த பாகிஸ்தான்

ஷாருக்கான் படத்துக்குத் தடை விதித்த பாகிஸ்தான்
Published on

ஷாருக்கானின் ரயீஸ் படத்தை பாகிஸ்தானில் வெளியிட அந்நாட்டு திரைப்படத் தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது.

பாலிவுட் பாட்ஷா என்றழைக்கப்படும் ஷாருக்கான், பாகிஸ்தான் நடிகை மஹிரா கான் உள்ளிட்டோர் நடத்துள்ள ரயீஸ் படம் குடியரசு தினத்தை ஒட்டி வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ரயீஸ் படம், இஸ்லாமியர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதால் அதை பாகிஸ்தானில் வெளியிட அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டு திரைப்படத் தணிக்கைத் துறையினர் தடை விதித்துள்ளனர். பாலிவுட் படங்களை வெளியிட பாகிஸ்தான் அரசு கடந்த அக்டோபரில் தடை விதித்தது. இதனால் பாகிஸ்தான் தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பாலிவுட் படங்களைத் திரையிட அனுமதித்து அதிபர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான குழு கடந்த வாரம் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com