அனுராக் கஷ்யப் மீதான பாலியல் குற்றச்சாட்டு: 8 மணி நேரம் சிபிஐ கிடுக்குப்பிடி விசாரணை

அனுராக் கஷ்யப் மீதான பாலியல் குற்றச்சாட்டு: 8 மணி நேரம் சிபிஐ கிடுக்குப்பிடி விசாரணை
அனுராக் கஷ்யப் மீதான பாலியல் குற்றச்சாட்டு: 8 மணி நேரம் சிபிஐ கிடுக்குப்பிடி விசாரணை

பாலியல் புகார் தொடர்பாக பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப்பிடம் மகராஷ்டிரா காவல்துறையினர் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்தித் திரையுலகின் பிரபல இயக்குநரான அனுராக் கஷ்யப் மீது பாலிவுட் நடிகை பாயல் கோஷ், மும்பை வெர்சோவா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கடந்த 2013ஆம் ஆண்டு பட வாய்ப்பு கேட்டு சென்றபோது அனுராக் கஷ்யப், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியிருந்தார். அதனடிப்படையில் அனுராக் கஷ்யப் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

காஷ்யப் கைது செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, நடிகை பாயல் கோஷ் ஆகியோர் வலியுறுத்தி வந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பினர். அதனை தொடர்ந்து, மும்பை வெர்சோவா காவல்நிலையத்தில் நேற்று காலை பத்துமணிக்கு அனுராஜ் கஷ்யப் ஆஜரானார். அவரிடம் 8 மணிநேரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com