”அரசியல் காரணம் ஏதும் இல்லை” - லியோ இசை வெளியீட்டு விழா இல்லை.. தயாரிப்பு நிறுவனம் சொன்ன காரணம்!

லியோ திரைப்படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று காலை முதல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் துவங்கிய நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. Noise and grains நிறுவனம் இதற்கான பணிகளை துவங்கினர். ஏற்கனவே ஆடியோ வெளியிட்டு நிகழ்ச்சிக்கு 16 ஆயிரம் நபர்களுக்கு அனுமதி வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நேரு உள்விளையாட்டு அரங்கில் அதிகபட்சம் 6500 நபர்கள் மட்டுமே அனுமதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com