பிறந்தநாளன்று சர்வர் சுந்தரம் படத்தின் டீஸரை வெளியிட்ட சிம்பு

பிறந்தநாளன்று சர்வர் சுந்தரம் படத்தின் டீஸரை வெளியிட்ட சிம்பு

பிறந்தநாளன்று சர்வர் சுந்தரம் படத்தின் டீஸரை வெளியிட்ட சிம்பு
Published on

அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படத்தின் டீஸரை இன்று காலை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார்.

சந்தானம், வைபவி இணைந்து நடித்துள்ள சர்வர் சுந்தரம் படத்தின் டீஸர் இன்று காலை வெளியிடப்பட்டது. சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியவருமான நடிகர் சிலம்பரசன் தனது பிறந்தநாளான இன்று இப்படத்தின் டீஸரை வெளியிட்டார். காமெடி, ஆக்ஸன் என அனைத்தும் கலந்த கமர்சியல் படமாக சர்வர் சுந்தரம் உருவாகியிருக்கிறது.

படத்தில் எஞ்சினியரிங் மாணவராக நடித்துள்ள சந்தானம் அவருக்கே உரித்தான நக்கல், நய்யாண்டி பாணியில் வசனங்களை பேசியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரசிகர்களை கவரும் விதத்தில் சமீபகாலமாக தமிழ் படங்கள் டீஸரின் ஆரம்பத்தில் திருக்குறள், ரைம்ஸ், என ஏதாவது ஒன்று இடம்பெற்று வருகிறது.அந்தவகையில் இப்படத்தின் டீஸரும்

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

என்ற திருக்குறள் வரிகளால் துவங்கியுள்ளது.

படத்தின் டீஸரை வெளியிட்ட சிலம்பரசன் தனது டுவிட்டர் பக்கத்தில், டீஸரை வெளியிட்டது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் படம் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com