movie list
movie listpt

L2: எம்புரான் முதல் மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் வரை! இந்த வார படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் வெளியாகவிருக்கும் படங்களின் விவரங்கள் இதோ!

1. Series

Om Kali Jai Kali (Tamil) Jio Hotstar - Mar 28

விமல் நடித்துள்ள சீரிஸ் `ஓம் காளி ஜெய் காளி’. தசரா பண்டிகையின் போது அவிழும் பகையும், மர்மங்களுமே கதை.

2. OTT

Seruppugal Jaakirathai (Tamil) ZEE5 - Mar 28

ராஜேஷ் சுசீராஜ் இயக்கியுள்ள படம் `செருப்புகள் ஜாக்கிரதை’. செருப்புக்குள் வைரத்தை வைத்து கடத்தும் போது, ஏற்படும் குழப்பங்களும், கலாட்டாக்களுமே கதை.

3. Post Theatrical Digital Streaming

Sky Force (Hindi) Prime - Mar 24

சந்தீப் - அபிஷேக் இயக்கத்தில் அக்ஷய்குமார், வீர் நடித்துள்ள படம் `Sky Force'. 1965ல் நடைபெற்ற இந்தியாவின் முதல் வான் வழி தாக்குதலை மையமாக வைத்து உருவாகியுள்ளது படம்.

4. Mr. House Keeping (Tamil) Aha - Mar 25

அருண் இயக்கத்தில் ஹரிபாஸ்கர், லாஸ்லியா நடித்துள்ள படம் `மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்'. தன்னுடைய கிரஷ்ஷிடம் வேலையாளாக சேரும் இளைஞனின் கதை.

5. Anpodu Kanmani (Malayalam) Prime - Mar 25

லிஜு இயக்கத்தில் அர்ஜுன் அசோகன் நடித்த படம் `Anpodu Kanmani’. புதுமணத்தம்பதி தங்கள் வாழ்க்கையை துவங்குவதில் உள்ள சிக்கல்களைப் பற்றிய கதை.

6. The Outrun (English) Prime - Mar 25

நோரா இயக்கிய படம் `The Outrun’. சொந்த ஊருக்கு திரும்பும் பெண்ணைப் பற்றிய கதை.

7. Mufasa The Lion King (English) Jio Hotstar - Mar 26

Barry Jenkins இயக்கிய படம் `Mufasa: The Lion King'. The Lion King படத்தின் ப்ரீக்குவலான இது, முஃபாசாவின் கதையை சொல்கிறது.

8. Twilight of the Warriors: Walled In (Cantonese) Prime - Mar 27

Soi Cheang இயக்கிய படம் `Twilight Of The Warriors: Walled'. Chan Lok என்ற இளைஞன் எதிர்பாராத விதமாக Walled Cityக்குள் நுழைகிறான். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

9. Aghathiyaa (Tamil) Sun NXT - Mar 28

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜூன், ராஷி கண்ணா நடித்த படம் `அகத்தியா’. ஒரு அரண்மனைக்குள் சென்ற பின், அங்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களே கதை.

10. Theatre

Veera Dheera Sooran (Tamil) - Mar 27

அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் `வீர தீர சூரன்’. மளிகை கடை வைத்திருக்கும் காளியின் இன்னொரு முகம் என்ன? அதனால் வரும் பிரச்சனைகள் என்ன? என்பதே கதை.

11. L2: Empuraan (Malayalam) - Mar 27

மோகன் லால் நடிப்பில் ப்ரித்விராஜ் இயக்கியுள்ள படம் `L2: Empuraan’. அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து குடும்பத்தை கப்பாற்றிய ஸ்டீபன், பெரிய நெட்வொர்க்கின் தலைவன் அப்ராம் குரேஷி என முடிந்தது முதல் பாகம், இந்த பாகத்தில் அப்ராம் யார் என சொல்லப்படுவதே கதை.

12. The Door (Tamil) - Mar 28

ஜெய் தேவ் இயக்கத்தில் பாவனா நடித்துள்ள படம் `தி டோர்’. ஹாரர் த்ரில்லராக உருவாகியிருக்கிறது படம்.

13. Robinhood (Telugu) - Mar 28

வெங்கி இயக்கத்தில் நிதின் நடித்துள்ள படம் `Robinhood'. நீரா என்ற பெண்ணின் காவலாளியாக மாறும் ஒரு திருடனைப் பற்றிய கதை.

14. Mad Square (Telugu) - Mar 28

கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் 2023ல் வெளியான படம் `Mad’. இதன் இரண்டாம் பாகமே `Mad Square’. கல்லூரி கால கலாட்டாக்களை பேசிய படம், இப்போது கல்யாண கலாட்டாக்களை பேசப் போகிறது.

15. Black Bag (English) - Mar 28

Steven Soderbergh இயக்கத்தில் Cate Blanchett நடித்துள்ள படம் `Black Bag'. மனைவி கேத்தரின் தேச துரோக வழக்கில் சிக்க, அவளது கணவன் என்ன செய்கிறார் என்பதே கதை.

16. Sikandar (Hindi) - Mar 30

முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்துள்ள படம் `Sikandar'. சிக்கந்தர் என்ற இளைஞனின் வாழ்க்கையே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com