சின்னத்திரை படப்பிடிப்புகள் ஜூன் 6 இல் தொடக்கம் ?

சின்னத்திரை படப்பிடிப்புகள் ஜூன் 6 இல் தொடக்கம் ?
சின்னத்திரை படப்பிடிப்புகள் ஜூன் 6 இல் தொடக்கம் ?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சின்னத்திரை படப்பிடிப்புகள் ஜூன் 6 ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்பிருப்பதாக பெப்சி தரப்பில் தகவ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 நாட்களுக்கு மேலாக சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் தமிழக அரசு 60 தொழிலாளர்களைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று அனுமதி கொடுத்தது. இதையடுத்து படப்பிடிப்புகளைத் தொடங்குவதற்கான வேலைகளை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் செய்துவந்தது.

மேலும் படப்பிடிப்பை எவ்வாறெல்லாம் முன்னெச்சரிக்கையுடன் நடத்தலாம் என்றும் பெப்சி அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வரும் 6 ஆம் தேதியிலிருந்து படப்பிடிப்பை நடத்த சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com