’நாகினி’ டிவி தொடரில் இச்சாதாரி பாம்பாக நடிப்பவர்கள் மவுனி ராய், அடா கான். இந்தியில் உருவாகும் இந்த தொடர் தமிழ், தெலுங்கு உட்பட பிராந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. ரசிகர்களிடையே அதிக ஈர்ப்பைக் கொண்டுள்ள இந்தத் தொடர் மூலம் மவுனி ராயும் அடா கானும் அதிக பிரபலமடைந்துள்ளனர்.
சினிமா ஹீரோயினை விடவும் அதிகமாக பிரபலமடைந்துள்ள இவர்கள், இப்போது சினிமாவில் நடிக்க இருக்கின்றனர். மவுனி ராய், ரெமோ டிசவுசா இயக்கும் நடனம் தொடர்பான படத்தில் சல்மான் கானுடன் நடிக்க இருக்கிறார் என்று தகவல். இதற்கிடையே ’கோல்டு’ என்ற படத்தில் அக்ஷய் குமாருடனும் நடிக்க இருக்கிறாராம்.
இந்தப் படங்கள் பற்றி கேட்டால், ’மூச், அதை நான் சொல்லக் கூடாது’ என்று மவுனமாக நழுவுகிறார் மவுனி ராய்.