சீரியல் நடிகை இயக்கிய மியூசிக் ஆல்பம்

சீரியல் நடிகை இயக்கிய மியூசிக் ஆல்பம்

சீரியல் நடிகை இயக்கிய மியூசிக் ஆல்பம்
Published on

தமிழ் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் பல்வேறு குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருப்பவர் எலிசபத் சூரஜ். 

இப்போது முதல் முறையாக "உஷார் கேர்ல்ஸ்" என்ற மியூசிக் ஆல்பமை வெளியிட்டுள்ளார். நேற்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இந்த இசை ஆல்பம் வெளியிடப்பட்டது. இந்த ஆல்பத்தை பாடல் வரிகள் எழுதி, பாடி, இயக்கவும் செய்துள்ளார் எலிசபத் சூரஜ். இந்த ஆல்பத்துக்கு முரளி கிருஷ்ணன் என்பவர் இசையமைத்துள்ளார். இந்த ஆல்பத்தில் வரும் ராப் பகுதியை மட்டும் ஷெரில் சூரஜ் பாடியுள்ளார். பாலா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த ஆல்பத்தில் தமிழ்த் தொலைக்காட்சி முன்னணி நடிகைகள் பலர் தோன்றி நடித்துள்ளனர்.

ஏமாற்றும் ஆண்களிடம் இருந்து பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் உஷார் கேர்ல்ஸ் மியூசிக் ஆல்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்போது "உஷார் கேர்ல்ஸ்" மியூசிக் ஆல்பம் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து எலிசபத் சூரஜ் கூறியது "நடிக்கும் நேரத்தை தவிர்த்து இதுபோன்று முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என எண்ணினேன். இதன் காரணமாகவே இந்த மியூசிக் ஆல்பத்தை உருவாக்கினேன்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com