“கணவருடன் சேர்த்து வையுங்கள்” சின்னத்திரை நடிகை தீபா நீதிமன்றத்தில் வழக்கு

காதல் திருமணம் செய்துகொண்ட தன் கணவருடன் தன்னை சேர்த்துவைக்கக்கோரி சின்னத்திரை நடிகை தீபா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நாம் இருவர் நமக்கு இருவர், அன்பே சிவம் உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள நடிகை தீபா, ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில், தன்னுடைய மகனுடன் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் கணேஷ் பாபு என்பவருடன் தீபாவுக்கு காதல் ஏற்படவே, இருவரும் கடந்த ஆண்டு பதிவு திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வசித்துவந்தனர். சமீபகாலமாக இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து தீபாவை பிரிந்து கணேஷ் பாபு வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், பிரிந்து வாழும் தனது கணவருடன் தன்னை சேர்த்துவைக்கக்கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கணேஷின் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். எனினும், தன் கணவருடன் சேர்ந்து வாழ்வதையே தான் விரும்புவதால், அவருடன் தன்னை சேர்த்து வைக்கவேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com