\
“ஜெயஸ்ரீ மீது நடவடிக்கை எடுங்கள்” - நடிகை மகாலட்சுமி போலீசில் புகார்..!

“ஜெயஸ்ரீ மீது நடவடிக்கை எடுங்கள்” - நடிகை மகாலட்சுமி போலீசில் புகார்..!

“ஜெயஸ்ரீ மீது நடவடிக்கை எடுங்கள்” - நடிகை மகாலட்சுமி போலீசில் புகார்..!
Published on

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

‘தேவதையைக் கண்டேன்’ என்ற சீரியலில் ஹீரோவாக நடித்திருப்பவர் ஈஸ்வர். இவரது மனைவி ஜெயஸ்ரீயும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். இந்த தம்பதிக்கு 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

இதனிடையே நடிகர் ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனால் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் ஜெயஸ்ரீ சமீபத்தில் புகாரளித்திருந்தார். அதன்பேரில் ஈஸ்வர் கைது செய்யப்பட்டு சிறை சென்று பின்னர் ஜாமீனில் வந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வர், தனக்கும் மகாலட்சுமிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், தனது மனைவி ஜெயஸ்ரீக்கும் மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும்தான் தொடர்பிருப்பதாகவும் கூறினார். ஆனால் நடிகை ஜெயஸ்ரீ தனக்கு தங்கை மாதிரி என மகாலட்சுமியின் கணவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சின்னத்திரை நடிகை மகாலட்சுமி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னை பற்றி அவதூறு பரப்பி வரும் சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ மீதும் தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com