The Boys சீரிஸின் ஸ்பின் ஆஃப் ஆக உருவான சீரிஸ் `Gen V'. இதன் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகிறது. சூப்பர் ஹீரோ பள்ளியில் நடக்கும் அத்துமீறல்களே கதை.
Mimi Leder இயக்கத்தில் உருவாகியுள்ளது The Morning Show சீரிஸின் 4வது சீசன். தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களுக்கு வரும் பிரச்சனைகள் பற்றிய கதை.
The Ba***ds of Bollywood (Hindi) Netflix - Sep 18
Aryan Khan இயக்கத்தில் உருவான சீரிஸ் `The Ba***ds of Bollywood'. பாலிவுட் சினிமா உலகத்தில் நடக்கும் விஷயங்களே கதை.
செந்தில், ஜெயசீலன் நடித்துள்ள சீரிஸ் `போலீஸ் போலீஸ்'. காவலர் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களே கதை.
Umesh Bist இயக்கத்தில் உருவாகியுள்ளது `The Trial' சீரிஸின் இரண்டாவது சீசன். தவறு செய்த கணவரை கோர்ட்டில் நிறுத்தி அவருக்கு எதிராக வாதாடிய பெண்ணின் கதை.
Mark Anthony Green இயக்கத்தில் Ayo Edebiri நடித்த படம் `Opus'. ஒரு எழுத்தாளர் மறைந்த பாப் இசை கலைஞர்களின் ரசிகர்களிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பின் என்ன ஆகிறது எனப்தே கதை.
Adrian Molina இயக்கிய படம் `Elio'. ஏலியன் மீது அதீத ஆர்வம் கொண்ட சிறுவன் எலியோ ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள, அதிலிருந்து எப்படி தப்பினான் என்பதே கதை.
Ryan Coogler இயக்கத்தில் Michael B. Jordan நடித்த படம் `Sinners'. சொந்தமாக இடம் வாங்கி பார் திறக்கும் சகோதரர்களுக்கு எதிர் வரும் சிக்கலும், அதை அவர்கள் எதிர்கொள்ளுவதுமே கதை.
ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், ஆர்ஷா நடித்த படம் `ஹவுஸ்மேட்ஸ்'. புதுமண தம்பதி கார்த்திக் - அணு குடியேறும் வீட்டில் நிகழும் அமானுஷ்ய சம்பவங்களே கதை.
சபரீஷ் இயக்கத்தில் வசந்த் ரவி நடித்த படம் `இந்திரா'. பார்வையை இழந்த காவலர் ஒருவர், சீரியல் கில்லர் வழக்கில் என்ன செய்கிறார் என்பதே கதை.
Lorcan Finnegan இயக்கத்தில் நிக்கலஸ் கேஜ் நடித்த படம் `The Surfer'. தன் மகனுடன் சர்ஃப் செய்ய செல்லும் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளே கதை.
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் `சக்தித் திருமகன்'. புத்திசாலி ஒருவன் ஆடும் ஆட்டமே கதை.
சதீஷ் இயக்கத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ள படம் `கிஸ்'. ஹீரோவுக்கு உள்ள ஒரு அமானுஷ்ய சக்தியால் வரும் சிக்கல்களே கதை.
அதியன் ஆதிரை இயக்கியுள்ள படம் `தண்டகாரண்யம்'. பழங்குடிகள் வாழ்வில் உள்ள சிக்கலை பேசும் படம்.
கௌதமன் இயக்கியுள்ள படம் `படையாண்ட மாவீரா'. காடுவெட்டி குரு வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ள படம்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஆசிஃப் அலி, அபர்ணா பாலமுரளி நடித்துள்ள படம் `Mirage. தான் திருமணம் செய்து கொள்ள இருந்த கிரண் காணாமல் போக, அவரை தேடி செல்கிறாள் அபிராமி. அந்த தேடலில் பல உண்மைகள் வெளிவருகிறது.
சுபாஷ் கபூர் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள படம் `Jolly LLB 3'. இம்முறை எந்த வழக்கை ஜாலி விசாரிக்கிறார் என்பதே கதை.
அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள படம் `Nishaanchi'. இரு சகோதரர்கள் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் கதை.
ரவீந்திரா கௌதம் இயக்கியுள்ள படம் `Ajey: The Untold Story of a Yogi'. யோகி ஆதித்யநாத் பயோபிக்காக உருவாகியுள்ளது படம்.
J.J. Perry இயக்கத்தில் தேவ் பட்டிஸ்ட்டா, சாமுவேல் ஜாக்சன் நடித்துள்ள படம் `Afterburn'. ஒரு அட்வென்சர் ஆக்ஷன் படம்.
Justin Tipping இயக்கியுள்ள படம் `Him'. ஒரு இளம் தடகள வீரர், பயிற்சியாளராக செல்லும் போது என்ன நடக்கிறது என்பதே கதை.
Kogonada இயக்கத்தில் Colin Farrell, Margot Robbie நடித்துள்ள படம் `A Big Bold Beautiful Journey'. முன்பின் அறிமுகமற்ற இருவர் ஒரு திருமணத்தில் சந்தித்துக் கொள்ள அதன் பின் நடப்பவையே கதை.