பீச்சில் கர்சீப் விற்கும் நடிகை ரங்கம்மா பாட்டி: நடிகர் சங்கம் உதவ கோரிக்கை!

பீச்சில் கர்சீப் விற்கும் நடிகை ரங்கம்மா பாட்டி: நடிகர் சங்கம் உதவ கோரிக்கை!

பீச்சில் கர்சீப் விற்கும் நடிகை ரங்கம்மா பாட்டி: நடிகர் சங்கம் உதவ கோரிக்கை!
Published on

சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப் உட்பட கைவினைப் பொருட்களை விற்று வரும் நடிகை ரங்கம்மா பாட்டி, தனக்கு நடிகர் சங்கம் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்தவர், கே.ஆர்.ரங்கம்மாள் (83) பாட்டி. சென்னை வடபழனி குமரன் காலனியில் வசிக்கும் இவர், வடிவேலுவுடன் இணைந்து பல காமெடிகளில் நடித்துள்ளார். இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் வறு மையில் வாடும் அவர், மெரினா கடற்கரையில் கர்சீப் விற்று பிழைப்பை நடத்தி வருகிறார். 

இதுபற்றி அவர் கூறும்போது, ’’எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே நடித்து வருகிறேன். சுமார் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ள நான், சம்பாதித்த பணத்தை பிள்ளைகளுக்கே செலவழித்து விட்டேன். இப்போதும் நடிக்க தயாராக இருந்தாலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் சாப்பாட்டுக்கே வழியில்லை. இதனால், கடற்கரையில் கர்சீப் மற்றும் கைவினை பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். இந்த வருமானம் போதுமானதாக இல்லை. தமிழக அரசோ அல்லது நடிகர் சங்கமோ உதவவேண்டும்’’ என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ஏற்கனவே மெரினாவின் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்று வந்த ரங்கம்மா பாட்டிக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் சங்கம் உதவி தொகையாக ரூ. 5000 வழங்கியது.  ரங்கம்மா பாட்டி, ஃபெப்சி அமைப்பின் கீழ் உள்ள ஜூனியர் ஆர்டிஸ்ட் சங்கத் தின் உறுப்பினர். ஒருவர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருந்தால் மட்டும்தான் நடிகர் சங்கம் மூலம் அவருக் கு உதவி தொகை வழங்க முடியும் என்பதால் வேறு எப்படி அவருக்கு உதவலாம் என நடிகர் சங்கம், முன்பு ஆலோசனை நடத்தியது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com