‘நானே வருவேன்’ செல்வராகவன் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

‘நானே வருவேன்’ செல்வராகவன் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

‘நானே வருவேன்’ செல்வராகவன் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on

இயக்குநர் செல்வராகவனின் வீட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீரென சென்றநிலையில், இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கியுள்ள ‘நானே வருவேன்’ படத்தை, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன் சீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் வருகிற 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் நன்றாகவே விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவே கூறப்படுகிறது. மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தோடு இந்தப் படம் மோதவுள்ளநிலையில், இந்தப் படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம் இந்தப் படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் வீட்டிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ள செல்வராகவன், முதல்வரின் வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com