அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'சாணிக்காயிதம்' படத்தில் ஹீரோவாக நடித்துவரும் செல்வராகவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான `ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அருண் மாதேஸ்வரன். அதேபோல, சுதா கொங்காரா இயக்கிய இறுதிச்சுற்று படத்துக்கும் வசனகர்த்தாவாக பணியாற்றியிருக்கிறார். தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள அவர், செல்வராகவனையும், கீர்த்தி சுரேஷையும் வைத்து ‘சாணிக் காயிதம்’ படத்தை இயக்கி வருகிறார்.
செல்வராகவன் ஹீரோவாக கால்பதிக்கும் முதல் திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இந்த படம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை செல்வராகவன் பதிவிட்டுள்ளார். தாடியுடன் புது கெட்டப்பில் இருக்கும் அவரது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.