\
ரஜினிகாந்த் ரசிகர்களை போற்றி புதிய படம்  12 .12.1950

ரஜினிகாந்த் ரசிகர்களை போற்றி புதிய படம் 12 .12.1950

ரஜினிகாந்த் ரசிகர்களை போற்றி புதிய படம் 12 .12.1950
Published on

நடிகர் மற்றும் இயக்குநர் செல்வா இயக்கிவரும் படம் 12-12-1950. ரஜினிகாந்த் பிறந்த தேதி ஆண்டை டைட்டிலாக கொண்ட இந்தப்படம் காமெடி கலந்த ஆக்சன் படமாக உருவாகிறது.

ரஜினி ரசிகர்களாக ஐந்து பேர் நடிக்க உள்ள இந்தப்படம் அவரது ரசிகர்களை வேறொரு உயரத்திற்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என இயக்குநர் செல்வா தெரிவித்துள்ளார்.  இந்தப்படத்தின் மோசன் போஸ்டர் நேற்று வெளியானது. இதுகுறித்து இயக்குநர் செல்வா கூறும்போது “இந்தப்படம் ரஜினி ரசிகர்கள் ஐந்து பேரின் வாழக்கைப்பயணத்தை சொல்லும் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த டைட்டில் ரைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பணத்திற்காகவோ, படத்தின் புகழுக்காகவோ இந்தத் தலைப்பை தேர்வு செய்யவில்லை. படத்திற்கு பொறுத்தமாக இருக்கும் என்பதால் இதனை தேர்வு செய்தோம். இந்தப்படத்தில் செல்வாவுடன், ரமேஷ் திலக், அஜய், ஆதவன், பிரசாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். 
’நான் எப்போதும் ரஜினியின் பிறந்த நாளின்போது சென்று அரவது வாழ்த்தைப்பெறுவேன். இந்தப்படத்தை முடித்து விட்டு அவரைச் சந்த்தித்து படம் குறித்து ஆலோசனை நடத்தினேன்.  அவர் கேட்டுவிட்டு நல்ல ஐடியா என  வாழ்த்தினார். விரைவில் படம் ரிலீசாக இருக்கிறது’என்கிறார் இயக்குநர் செல்வா. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com