\
விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' பட டீசர் இன்று மாலை வெளியீடு

விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' பட டீசர் இன்று மாலை வெளியீடு

விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' பட டீசர் இன்று மாலை வெளியீடு
Published on
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'மாமனிதன்' திரைப்படத்தின் டீசர் இன்று (டிச.06) மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமனிதன்'. இந்தப் படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது. ஆனால் அடுத்து எழுந்த தடங்கல்களால் இந்த படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போனது.
இந்நிலையில் 'மாமனிதன்' திரைப்படத்தின் டீசர் இன்று (டிச.06) மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com