’சகோதரி நயன்தாரா...’ நெகிழ்கிறார் சீனு ராமசாமி!
நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்துள்ள படம், ’அறம்’. கோபி நைனார் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நயன்தாராவின் மானேஜர் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இந்தப் படம் சினிமாதுறையினர் சிலருக்கு பிரத்யேகமாக திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த இயக்குனர் சீனு ராமசாமி, நடிகை நயன்தாராவை பாராட்டியுள்ளார்.
இதுபற்றி இயக்குனர் சீனு ராமசாமி கூறும்போது, ‘இந்தப் படம் சிறப்பான கதையை கொண்டிருக்கிறது. இயக்குனர் கோபி நைனார், கதையை தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இந்தப் படத்தில் சகோதரி நயன் தாரா சிறப்பாக நடித்துள்ளார். நயன் தாரா இந்த மாதிரி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வேண்டும். இதுபோன்ற சினிமாக்களை அவர் ஊக்குவிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
அவரது அடுத்தப் படம் பற்றி சீனு ராமசாமியிடம் கேட்டபோது, ‘அடுத்து அதர்வா முரளி இயக்கும் ‘ஒரு ஜீவன் அழைத்தது’ என்ற படத்தை இயக்குகிறேன். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்’ என்றார்.