\
சீமராஜா படத்தின் சிறப்புக் காட்சி ரத்து

சீமராஜா படத்தின் சிறப்புக் காட்சி ரத்து

சீமராஜா படத்தின் சிறப்புக் காட்சி ரத்து
Published on

சீமராஜா படத்தின் சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘சீமராஜா’ திரைப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று திரைக்கு வெளிவருதாக அறிவிக்கப்பட்டிருந்த ‘சீமராஜா’வின் சிறப்பு காட்சி இன்று காலை 4 மணிக்கு திரையிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தினை ரீலிஸ் செய்ய வழங்கப்படும் கேடிஎம் இன்னும் வழங்கப்படாத காரணத்தினால் படத்தின் முதல் காட்சி திரையிடப்படவில்லை.

தமிழகம் முழுவதும் காலை 4 மணிக்கு வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 7 மணிக்கு பிறகான காட்சியே திரையிடப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com