\
தெறிக்கும் பார்வையுடன் சூர்யா - ’ஜெய்பீம்’ இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு

தெறிக்கும் பார்வையுடன் சூர்யா - ’ஜெய்பீம்’ இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு

தெறிக்கும் பார்வையுடன் சூர்யா - ’ஜெய்பீம்’ இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு
Published on: 

நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் சார்பில் தயாராகும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரும் தற்போது வெளியாகி இருக்கிறது.

அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படத்தின் இயக்குநரான தா.செ.ஞானவேல் எழுதி இயக்கும் இப்படத்தில் தயாரிப்பு மட்டுமன்றி, நடிக்கவும் செய்கிறார் சூர்யா. சிறப்புத் தோற்றத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, இந்த படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியானது. அதில் 'ஜெய் பீம்' முதல் போஸ்டரில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞராக தோற்றமளிப்பதை பார்க்க முடிகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. அதில் சிந்தனை கலந்து கூரிய பார்வையுடன் மங்கிய வெளிச்சத்தில் புத்தகங்களின் நடுவே சூர்யா அமர்ந்திருக்கிறார். பீம் என்ற இயற்பெயர் கொண்ட அம்பேத்கரைப் போன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரச்னைக்காக போராடும் ஒரு வழக்கறிஞரை நம் கண்முன் சூர்யா நிறுத்துவார் என்ற எதிர்ப்பார்ப்பை இந்த இரண்டு போஸ்டர்களும் நமக்குத் தூண்டுகின்றன.

முன்னதாக, நேற்றைய தினம் சூர்யாவின் 40-வது திரைப்படம் என்ற அடைமொழியுடன், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாவது லுக் வெளிவந்திருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com