'தளபதி 65’ - ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய ‘பீஸ்ட்’ 2வது போஸ்டர்

'தளபதி 65’ - ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய ‘பீஸ்ட்’ 2வது போஸ்டர்
'தளபதி 65’ - ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய  ‘பீஸ்ட்’ 2வது போஸ்டர்

ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கும் தளபதி 65 திரைப்படத்தின் 2வது லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. 

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலையே ’விஜய் 65’ படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது.

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ’விஜய் 65’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். பூஜா ஹெக்டே, பூவையார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதனிடையே நள்ளிரவு 12 மணிக்கு ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் மாஸ்ஸான இரண்டாவது லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே 1,49,500க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 67,500க்கும் அதிகமானோர் ரீட்வீட் செய்துள்ளனர். பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டு போஸ்டர்களும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com