\
வெளியானது ‘வாரிசு’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்

வெளியானது ‘வாரிசு’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்

வெளியானது ‘வாரிசு’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்
Published on

விஜய் நடிக்கும் 66வது படத்திற்கு 'வாரிசு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளிப்பட்ட நிலையில் இப்போது படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.

இன்று விஜயின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தில் தேர்ட் லுக் போஸ்டர் மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் இதன் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு 'வாரசடு' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். விஜயின் வழக்கமான ஆக்ஷன் படங்கள் போல் இல்லாமல், 'வாரிசு' ஒரு ஃபேமிலி சென்டிமென்ட் படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. 2023 பொங்கல் வெளியீடாக வர இருக்கிறது 'வாரிசு'.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com