\
ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம்: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம்: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம்: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
Published on: 

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் ‌குறித்து விசாரணை நடத்தக்கோரி தொடரப்பட்ட ‌மனுவை உச்சநீதிமன்றம் ‌தள்ளுபடி செய்தது.

உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்ற ஸ்ரீதேவி ஹோட்டலில் தங்கியிருந்த போது குளியல் தொட்டியில் தவறி விழுந்து பிப்ரவரி 24-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் சுனில் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி தாமாக விழுந்தாரா என்பதில் ‌சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் ஸ்ரீதேவியின் உயரம் 5.7 அடி என்றும் குளியல் தொட்டி 5 ‌அடி மட்டுமே கொண்டது என்றும் அவர் தமது மனுவில் கூறியுள்ளார். ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று சுனில் சிங் கோரியிருந்தார். ‌அவரது மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தள்ளு‌டி செய்தது. இதுபோன்ற மனுவை விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com