’பத்மாவதி’ திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தீபிகா படுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் உட்பட பலர் நடித்துள்ள இந்தி படம், ’பத்மாவதி’. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள இந்தப் படம் டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
ராணி பத்மினியின் கதையான இதில் வரலாற்று ரீதியான பல தகவல்கள், பிழையாக இருப்பதாகவும் பத்மினியின் கேரக்டரை தவறாக சித்தரித்திருப்பதாகவும் அதனால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சித்தராஜ சிங் உள்ளிட்ட 11 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏஎம் கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் நேற்று வந்தது. அவர்கள் அளித்த தீர்ப்பில், படத்தின் அனைத்து அம்சங்களையும் கருத்தில்கொண்ட பின்னரே தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்திருக்கும் என்பதால் தாங்கள் தடை விதிக்கமுடியாது’ என தெரிவித்தனர்.

