\
எஸ்.பி.பி நிச்சயம் குணமடைந்து வருவார் : தென்னிந்திய திரைப்பட வர்த்தக தலைவர்

எஸ்.பி.பி நிச்சயம் குணமடைந்து வருவார் : தென்னிந்திய திரைப்பட வர்த்தக தலைவர்

எஸ்.பி.பி நிச்சயம் குணமடைந்து வருவார் : தென்னிந்திய திரைப்பட வர்த்தக தலைவர்
Published on: 

எஸ்.பி.பி நிச்சயம் குணமடைந்து வருவார் என தென்னிந்திய திரைப்பட வர்த்தக தலைவர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் கொரோனா நோய் தொற்று காரணமாக பின்னணி பாடகர் எஸ்பிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து எக்மோ கருவி மற்றும் வெண்டிலேட்டர் கருவிகள் உதவிகளுடன் சிகிச்சைப்பெற்று வந்தார். தொடர்ந்து உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது.

இதைத்தொடர்ந்து சில நாட்களாக உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சைப்பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடந்து நடிகர் கமல்ஹாசன் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை விவரம் குறித்து விசாரித்தார். மேலும், எஸ்பிபி நன்றாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது என கமல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தென்னிந்திய திரப்பட வர்த்தக தலைவர் பிரசாத் கூறுகையில், “எஸ்பிபியின் உடல்நிலை தற்போது மோசமாக உள்ளது. ஆனால் எஸ்.பி.பி நிச்சயம் குணமடைந்து வருவார். அவரது நுரையீரல் பாதிப்படைந்துள்ளது. அனைத்து மருத்துவர்களும் அவரை கண்காணித்து வருகின்றனர். அவர் நலமுடன் திரும்ப அனைவரும் பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com