\
வைரலாகும் நடிகை சாயிஷாவின் ‘சொடக்குமேல’ டான்ஸ்

வைரலாகும் நடிகை சாயிஷாவின் ‘சொடக்குமேல’ டான்ஸ்

வைரலாகும் நடிகை சாயிஷாவின் ‘சொடக்குமேல’ டான்ஸ்
Published on

நடிகை சாயிஷா நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

‘வனமகன்’ நாயகி சாயிஷா. இப்போது ‘கடைக்குடி சிங்கம்’, ‘கஜினிகாந்த்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஜூங்கா’ படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ள வீடியோ ஒன்று இப்போது வைரலாக பரவி வருகிறது.

கடந்த சில மாதம் முன்பு சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்தக்கூட்டம்’ படத்தில் இடம்பெற்ற ‘சொடக்குமேல சொடக்கு போடுது’ பாடலுக்கு இவர் இப்போது நடனமாடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் பாடல் வெளியான போதே இசைய ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது. அப்போதே பலரும் அந்தப் பாடலுக்கு தங்களின் விருப்பத்திற்கே ஏற்ப நடனமாடி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினர். இப்போது சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் சாயிஷா நடனமாடியுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com