\
கேட்பரி ஜூனியர் க்ருஷ்ணனுக்கு ஹலோ சொல்லுங்க - த்ரிஷா

கேட்பரி ஜூனியர் க்ருஷ்ணனுக்கு ஹலோ சொல்லுங்க - த்ரிஷா

கேட்பரி ஜூனியர் க்ருஷ்ணனுக்கு ஹலோ சொல்லுங்க - த்ரிஷா
Published on

ஆதரவற்ற நாய் ஒன்றை தத்தெடுத்திருக்கும் நடிகை த்ரிஷா, சமீபத்தில் இறந்த தனது செல்ல நாயின் ”கேட்பரி” என்னும் பெயரையே அதற்கும் வைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தனது செல்ல நாயான கேட்பரி இறந்தபோது, “உன்னுடன் சேர்த்து என்னில் ஒரு பகுதியையும் அடக்கம் செய்கிறேன்” என தனது செல்லப்பிராணி இறந்ததற்கான தனது வேதனையை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார் த்ரிஷா.

இன்று ஆதரவற்ற ஒரு பெண் நாயை தத்தெடுத்திருக்கும் த்ரிஷா, “say hello to cadbury Jr.Krishnan. இறந்த எனது செல்லநாய் கேட்பரியைப் போலவே இது இருப்பதால், இதற்கும் அதே பெயர்தான்” என ட்வீட் செய்துள்ளார்.

ஆதரவற்ற விலங்குகளை பாதுகாக்க வேண்டியும், விலங்குகளுக்கு அடைக்கலம் அளிப்பதை வலியுறுத்தி வருபவர் நடிகை த்ரிஷா. பீட்டா விலங்குகள் நல அமைப்பின் விளம்பரங்களில் விலங்குகள் உரிமை குறித்து வலியுறுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com